
இந்தப் பதிவு நண்பர்களுடன் நடந்த ஒரு விவாதத்தின் பாதிப்பு...
அது என்னய்யா..? ரஜினி ரசிகன்னா உங்களுக்கு ஒரு இளக்காரம்... ரஜினி ரசிகன்னு சொன்னவுடனே எங்க அறிவு, சிந்தனை, பேச்சு எல்லாத்திலேயும் ஒரு சந்தேகம்... எங்ககிட்ட கேள்வி கேட்டு, ரஜினியை விமர்சனம் பண்றதிலே ஒரு சந்தோஷம்...
ஏன், ரஜினி எந்த விதத்தில் உங்களுக்கு ஒரு சகிக்கமுடியாததா இருக்கார்? ரஜினி என்ன இந்த மாநில முதல்வரா? அவர் எடுத்த முடிவுகளினால தனிமனிதனா நீங்க பாதிக்கப்பட்டீங்களா? உங்களை யாராவது மிரட்டி ரஜினி படம் பாக்க சொன்னாங்களா? உங்க பணத்தைப் பிடுங்கி ரஜினி சொத்து சேத்தாரா? அது என்ன... ரஜினி ரசிகன் காசு வீணாக்குறான்னு உங்களுக்கு இப்படி ஒரு அக்கறை? எனக்கு புரியவே இல்லை...
ரஜினி இல்லேன்னா கமல், விஜயகாந்த், ஏன் நம்ம விஜய.டி.ராஜேந்தர்னு ஏகப்பட்ட ‘ஆப்ஷன்’ இருக்கும்போது ரஜினியோட சரிவுகளையும், நெருக்கடிகளையும் பாக்குறதுல ஒரு ஆனந்தம்... ஏன் இப்படி?
‘நான் மனநிலை சரியில்லாமல் இருந்தேன். என்னைப் பைத்தியம் என்று கேலி செய்தார்கள்’ என்று எந்த ஒரு சாதாரண மனிதனாவது ஒத்துக்கொள்வானா?
‘ஆம், சில வேளைகளில் என் முடிவுகள் தப்பாக இருந்தன. என்னைக் குழப்பவாதி என்று எழுதுவதில் தவறில்லையே’ என்று எந்த பெரிய மனிதனாவது மேடையில் பேசுவானா?
‘அரசியல் கற்றுக்கொள்ளாமல் அதில் இறங்கமாட்டேன்’ என்று பணிவாக எவனாவது இந்தக் காலத்தில் அறிவிப்பானா?
‘முதலில் உங்கள் தாய்,தந்தை, குடும்பத்தை கவனியுங்கள். பின்னர், திரையரங்கிற்கு வாருங்கள்’ என்று எந்த பெரிய நடிகனாவது அறிவுறுத்துவானா?
‘என்னால் படப்பிடிப்பு ரத்தாகக் கூடாது’ என்று இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்ய இன்று நடிக்கும் வண்டு, சிண்டுகள் கூட யோசிக்குமா?
நல்ல கதைகளில் நடிக்கமுடியவில்லையே என சொல்லும் ரஜினி மசாலா படங்களைத் தொடர்வது ஏன் எனக் கேட்கிறீர்கள். நாங்கள் கேட்கிறோம், ஒரு படத்தில் நடித்தால் கோடி கோடியாக சம்பாதிக்கும் ரஜினி குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒரு படம் நடிக்கலாமே... ஏன் இவ்வளவு இடைவெளி வேண்டும்? ஏன் இமயமலை போய் சுற்றவேண்டும்? எல்லாவற்றிற்கும் மேல் நீங்கள் உங்கள் கொள்கைகளுக்காக எல்லாவற்றையும் இழந்து வாழ்கிறீர்களா அல்லது பிழைப்புக்காக விட்டுக்கொடுத்து வாழ்கிறீர்களா... மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்.
இதற்கெல்லாம் முதலில் பதில் சொல்லுங்கள்.
வார இதழ்களில் வரும் அறிவுஜீவிகளின் கட்டுரைகளையும், பகிரங்கக் கடிதங்களையும் நம்பி பேசாதீர்கள் நண்பர்களே... அவர்கள் எந்நேரமும் நிறம் மாற்றிக்கொள்வார்கள்.(உதா: விகடனின் இந்த வார ‘எந்திரன்’ கவர்ஸ்டோரி)
ரஜினி ரசிகன் மீது அக்கறையிருந்தால் ரஜினி படம் ஓடும் திரையரங்குகள் சென்று அவனை நிறுத்திப் பிடித்து அறிவுரை வழங்குங்கள். குறைந்தபட்சம் ரஜினியின் அடுத்த படத்திற்கு உங்கள் குடும்பத்தில் இருந்தாவது(உங்களையும் சேர்த்து) யாரையும் அனுப்பாமல் இருங்கள்.
குறிப்பு: இது என் பக்கத்திற்கான பதிலே தவிர எந்தவொரு விவாத்தில் பங்கேற்கவும் எண்ணம் இல்லை. எனவே, பின்னூட்டத்தில் என் பதிலை எதிர்பாராதீர்.
3 comments:
Hmmm... looks like you re really bugged with anti-Rajni activities ... Ya , whatever you ve posted about thalaivar is right ... Man , don t listen to what this world says ... Remember the frog story that thalaiavar once said ??? Just try to follow that . Nice to have read your blog . It shows your love for Thalaivar . Keep it up . Have a great time ...
Hmmm... looks like you re really bugged with anti-Rajni activities ... Ya , whatever you ve posted about thalaivar is right ... Man , don t listen to what this world says ... Remember the frog story that thalaiavar once said ??? Just try to follow that . Nice to have read your blog . It shows your love for Thalaivar . Keep it up . Have a great time ...
Thanks for your comments, Quartz.
Post a Comment