
தமிழன் என்று சொல்லுவதற்கே பல தகுதிகள் தேவைப்படும்போது, தமிழினத் தலைவர் என்று போற்றப்பட அவர் என்னென்ன செய்திருக்கவேண்டும் அல்லது செய்ய முற்படவேண்டும் என்ற சந்தேகம் என் மனதிற்குள் உண்டு. இலங்கைத் தமிழர் போராட்டத்திற்காக குரல் கொடுத்தால் களிதான் என திருவாய் மலர்ந்திருக்கும் முதல்வர் ’தமிழினத்தலைவர்’ என்று அவ்வப்போது தமிழகத்திற்கு அறிவிக்கப்ப்டும்போது நகைப்பாக மட்டுமல்ல, கடுப்பாகவும் உள்ளது.
5 முறை முதல்வர் ஆகி, 10 தலைமுறைக்கு சொத்து சேர்த்தபின்னும் பதவிக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் மானத்தை இழக்கத் துணிந்தவர் நம் முதல்வர்.
தன் மானத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களின் தன்மானத்தையும் தன் இலவசத்திட்டங்கள் மூலம் அசைத்துப்பார்த்தவர்.
மத்திய மந்திரி பதவிகளுக்காக ஆதரவு தர இழுத்தடித்தவர், ஈழத்தமிழர்கள் விஷயத்தில் மட்டும், வருடக்கணக்காக ‘பதவியைத் துறக்க தயார்’, ‘உயிரைக் கொடுக்கத் தயார்’ என்று முழங்கும் வாய்ச்சொல் வீரர்.
அய்யா, தமிழுக்கு உம்மை விட்டால் ஆளில்லை என்று சொன்னவன் நான். ஆனால், உங்கள் கேவலமான சுயநல அரசியலால்தான் இன்று கிளிநொச்சி கைவிட்டுப் போனது என்று உங்கள் ஒருத்தரை மட்டும் குற்றம் சாட்ட இன உணர்வு கொண்ட எந்தத் தமிழனுக்கும் எந்த தயக்கமும் இல்லை.
எல்லாரிடமும், எல்லா விதத்திலும், எல்லா வசவுகளையும் வாங்கிக்கொண்டும் நெஞ்சு நிமிர்த்தி உட்கார்ந்திருக்கும் தங்களிடம் என்னத்தை எதிர்பார்ப்பது?
ஹும்... பெருமூச்சு விடத்தான் முடிகிறது.
No comments:
Post a Comment