
பாலிவுட் நடிகர் அமீர் கான் நடித்து பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் "கஜினி' திரைப்படம், வசூலில் இதற்கு முந்தைய சாதனைகளை முறியடிக்கும் என நம்பப்படுகிறது. 250 கோடி ரூபாய் வரை வசூலாக வாய்ப் புள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.பிரபல நடிகர் அமீர் கான் நடிப்பில் வெளியான "கஜினி' இந்தி திரைப்படம், தற்போது இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் வாரத்திலேயே 90 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. வசூலில், இதற்கு முந்தைய படங்களின் சாதனைகளை "கஜினி' முறியடிக்கும் எனக் கூறப்படுகிறது.
பாலிவுட் வட்டாரங்கள் கூறியதாவது:
165 கோடி ரூபாய் வசூல் : ஷாருக் கான் நடித்த, "ரப்னே பானா டி ஜோடி' திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் 60 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதற்கு முன், அக்ஷய் குமார் நடித்த, "சிங் ஈஸ் கிங்' திரைப்படம் முதல் வாரத்தில் 55 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஆனால், இந்த வசூல் சாதனைகளை எல்லாம் "கஜினி' திரைப்படம் முறியடித்துள்ளது. முதல் வாரத்தில் மட்டும் 90 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.சமீபத்தில் வெளியான, "ஓம் சாந்தி ஓம்' திரைப்படம் மொத்தமாக 165 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த சாதனையை "கஜினி' கண்டிப்பாக முறியடிக்கும் என தெரிகிறது. இத்திரைப்படம் 250 கோடி ரூபாய் வரை வசூல் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.
சில வட இந்திய ‘Superiority complex' சுப்பாணிகள் இன்னும் ஒத்துக்கலே... என்னதான் அமீர்கான் படமாக இருந்தாலும், அமீரை அசத்தியது நம்ம முருகதாஸ்தானே... வாழ்த்துக்கள், முருகதாஸ். தொடர்ந்து கலக்குங்க...!!!
No comments:
Post a Comment