Tuesday, January 6, 2009

மகிந்த அரசின் எதிரிகள் புலிகள் மட்டுமல்ல...

மகிந்த அரசு மனிதநேயமில்லாமல் நடந்து கொள்வது தமிழ் மக்கள் மீது மட்டுமல்ல, அரசை எதிர்க்கும் யாரும் அவதிப்பட வேண்டியதுதான். மேலும், சிறிலங்கா படையினரே அலட்சியப்படுத்தப் படுகின்றனர். இன்று வெளிவந்த இரு செய்திகள் கீழே...

”மகிந்த அரசை விமர்சித்த எம்.ரி.வி., சக்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது தாக்குதல்



சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பன்னிப்பிட்ட்டியவில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனமான எம்.ரி.வி.யின் கலையகம் அடையாளம் தெரியாத குண்டர்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலைத் தொடர்ந்து குறிப்பிட்ட நிறுவனத்தின் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 2:30 நிமிடமளவில் குறிப்பிட்ட நிறுவனத்தின் கட்டடத்தை சுற்றிவளைத்துக்கொண்ட குண்டர் குழு ஒன்றே இத்தாக்குதலை நடத்தியிருப்பதாகத் தெரிகின்றது.

எம்.ரி.வி. நிறுவனம் மூன்று மொழிகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருவதுடன், பண்பலை அலைவரிசை வானொலிச் சேவைகளையும் மூன்று மொழிகளிலும் நடத்தி வருகின்றது.

அந்நாட்டு அரசாங்கத்தின் மீது அதிகளவுக்கு விமர்சனங்களை முன்வைப்பதால் இந்நிறுவனத்தின் மீது ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அண்மைக்காலத்தில் சீற்றமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.”

பேருந்துகளில் கொண்டு செல்லப்படும் காயமடைந்த படையினர்

வன்னி களமுனைகளில் பெருமளவிலான சிறிலங்கா படையினர் காயமடைந்து வருவதை தொடர்ந்து அவர்களை இருக்கைகள் அகற்றப்பட்ட பேருந்துகளின் மூலம் படைத்தரப்பு மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் கூறப்படுவதாவது:

வன்னி களமுனைகளில் காயமடையும் பெருமளவிலான படையினர் இருக்கைகள் அகற்றப்பட்ட பேருந்துகளில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

படையினரின் தேவைகளுக்கு போதுமான நோயளர் காவு வாகனங்கள் இருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ள போதும் படையினர் பேருந்துகளில் கொண்டு செல்லப்படுவதை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி படங்களுடன் ஆதாரப்படுத்தியுள்ளது.

அக்கட்சியினால் வெளியிடப்பட்ட படங்களில் பெருமளவான படையினர் பேருந்துகளில் பயணிப்பதும், அவர்களில் பலர் அவயவங்களை இழந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

நன்றி: புதினம்.காம்


இந்த அரசுதான் மக்களுக்காக புலிகளுடன் போரிடுகிறோம் என்று சொல்கிறது.



No comments: