Tuesday, January 6, 2009

நான் கடவுள் - அகோரிகளின் கதை??




தமிழ் சினிமாவின் மறுக்கமுடியாத அடையாளமான பாலாவின் நான்காவது படமான ‘நான் கடவுள்’ இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பு: மனோதிடம் உள்ளவர்கள் மட்டும் இப்பதிவை மேற்கொண்டு படிக்கவும்.

‘நான் கடவுள்’ தொடர்பாக சில வலைப்பூக்களை மேய்ந்துகொண்டிருந்தபோது கிடைத்த தகவல்களால் சிறிது அதிர்ச்சி அடைந்து ‘யூ டியூப்’-இல் அகோரிகளைப் பற்றிய ஒளி-ஒலி காட்சியைப் பார்க்க நேர்ந்தது. படுபயங்கரம்.

அகோரிக்கள்(Aghories) :

சிவபெருமானின் மூன்றாவது முகமான 'ருத்ர’ முகத்தை சற்று பயமுறுத்தும் முறையில் வழிபடுபவர்களே அகோரிக்கள் என்று கூறப்படுகிறது. கங்கைக்கரையில் சிறு சிறு குழுக்களாக இருக்கும் இவர்கள், கங்கையில் ‘புனிதம்’ பெறுவதற்காக வீசப்படும் பிணங்களை இழுத்து வைத்து நடுநிசியில் மண்டை ஓட்டு பூஜை நடத்தி அந்த பிணத்தையே அறுத்து சாப்பிடுகின்றனர். இது, சுடுகாட்டு கடவுளான சிவபெருமானை படிப்படியாக அடையும் விதம் என்று கூறுகின்றனர். (கங்கை புனித நீர் என்று இன்னும் நம்புகின்றீர்களா?)




‘நான் கடவுள்’ திரைப்படத்தில் ’ருத்ரன்’ என்ற பெயரில் வரும் ஆர்யா ஒரு அகோரியாக நடித்திருக்கிறார் என்றும், இறுதிக்காட்சியில் தன் காதலியான பூஜாவின் பிணத்தையே அறுத்து சாப்பிடுகிறார் எனவும் தகவல். ’அகோரிக்கள்’ பற்றிய ஒளி-ஒலி காட்சியைப் பார்த்தபின், ‘நான் கடவுள்’ திரைப்பட முன்னோட்டக் காட்சியைப் பார்த்தால்(மேலே) பல ஒற்றுமைகள் தென்படுகின்றன. என்ன, படம் பார்க்க தயாரா?

பின்குறிப்பு: ‘நான் கடவுள்’ ருத்ரனுக்கும் இந்த வலைப்பூவின் பெயருக்கும் எந்த தொடர்புமில்லை. என் பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த பெயரை எனக்கு தேர்வு செய்துவிட்டனர். :)

No comments: