உலகிலேயே ஆங்கிலத்துக்கு அடுத்து தமிழில்தான் அதிகமான இணையத்தளங்களும், வலைப்பூக்களும் உள்ளன என்று ஒரு தகவல் உண்டு.
ஆனால், இந்த வலைப்பூக்களையும் ஆர்குட் போன்ற சமூக தளங்களையும் உள்ளே போய் பார்த்தால் தலையில் அடித்துக்கொள்ள தோன்றுகிறது. கிராமங்களில் நடக்கும் சாதிசண்டைகளுக்கு சற்றும் குறைவில்லாத, அருவருக்கத்தக்க சாதிசண்டைகள் நடந்துவருகிறது.
வெளியில் ஆயுதங்களைக் கொண்டு மோதிக்கொள்கிறார்கள். இங்கே, தாங்கள் தேடிப்பிடித்து படித்த நூல்களைக் கொண்டும், மானாவாரியாக ‘லிங்க்’குகளைக் கொடுத்தும் அடித்துக்கொள்கிறார்கள். மனதில் இருக்கும் துவேஷம் ஒன்றுதான்.
‘பார்ப்பனீய எதிர்ப்பு’, ‘பெரியாரின் மறுபக்கம்’ போன்ற விஷயங்கள் ரஜினி படங்களுக்கு ஒப்பானவை. ஆளாளுக்கு தங்கள் அறிவைக் காண்பிக்கிறோம் என்று கோதாவில் இறங்கி அடித்துக்கொண்டு தங்களையே சிறுமைப்படுத்திக்கொள்கிறார்கள்.
அடப்பாவிகளா, கடைசியில் தங்கள் கணிணி/மென்பொருள் அறிவு இதற்கா உபயோகப்படவேண்டும்? இதற்கு படிக்காத அன்றாடங்காய்ச்சி எவ்வளவோ பரவாயில்லையே...
5 months ago
No comments:
Post a Comment