Tuesday, January 6, 2009

HIV+ woman elected for panchayat




We've often heard of HIV-positive people being ostracised. But in a refreshing change, people in Tamil Nadu's Kodangipatti village have elected Eswari, who is HIV-positive, to represent them in the local panchayat.

In two years, Eswari has provided the villagers with many basic amenities they were deprived of for years.
"She has brought us good roads, drinking water, set right street lamps and has provided us many facilities," said a villager.

"We are ready to do anything she asks," said M Thirukannan, president, Kodangipatti Panchyat.

But behind the lady's confidence lies a tragedy. Two of her children had died of
AIDS after she contracted HIV from her husband. The couple and their youngest son are now surviving on anti-retroviral drugs.

"We can achieve anything. The fact that despite HIV, I've contested and won, I think its a big achievement," said Eswari, councillor.
Eswari has now dedicated her life for the prevention of HIV.

Thanks: NDTV.com


அடடே, நம்ம மக்கள் கலக்குறாங்களே... வாழ்த்துக்களும், நன்றிகளும்...!!!

வடக்கில் கொடி நாட்டிய முருகதாஸ்


பாலிவுட் நடிகர் அமீர் கான் நடித்து பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் "கஜினி' திரைப்படம், வசூலில் இதற்கு முந்தைய சாதனைகளை முறியடிக்கும் என நம்பப்படுகிறது. 250 கோடி ரூபாய் வரை வசூலாக வாய்ப் புள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.பிரபல நடிகர் அமீர் கான் நடிப்பில் வெளியான "கஜினி' இந்தி திரைப்படம், தற்போது இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் வாரத்திலேயே 90 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. வசூலில், இதற்கு முந்தைய படங்களின் சாதனைகளை "கஜினி' முறியடிக்கும் எனக் கூறப்படுகிறது.

பாலிவுட் வட்டாரங்கள் கூறியதாவது:

165 கோடி ரூபாய் வசூல் : ஷாருக் கான் நடித்த, "ரப்னே பானா டி ஜோடி' திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் 60 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதற்கு முன், அக்ஷய் குமார் நடித்த, "சிங் ஈஸ் கிங்' திரைப்படம் முதல் வாரத்தில் 55 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஆனால், இந்த வசூல் சாதனைகளை எல்லாம் "கஜினி' திரைப்படம் முறியடித்துள்ளது. முதல் வாரத்தில் மட்டும் 90 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.சமீபத்தில் வெளியான, "ஓம் சாந்தி ஓம்' திரைப்படம் மொத்தமாக 165 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த சாதனையை "கஜினி' கண்டிப்பாக முறியடிக்கும் என தெரிகிறது. இத்திரைப்படம் 250 கோடி ரூபாய் வரை வசூல் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.


சில வட இந்திய ‘Superiority complex' சுப்பாணிகள் இன்னும் ஒத்துக்கலே... என்னதான் அமீர்கான் படமாக இருந்தாலும், அமீரை அசத்தியது நம்ம முருகதாஸ்தானே... வாழ்த்துக்கள், முருகதாஸ். தொடர்ந்து கலக்குங்க...!!!

மகிந்த அரசின் எதிரிகள் புலிகள் மட்டுமல்ல...

மகிந்த அரசு மனிதநேயமில்லாமல் நடந்து கொள்வது தமிழ் மக்கள் மீது மட்டுமல்ல, அரசை எதிர்க்கும் யாரும் அவதிப்பட வேண்டியதுதான். மேலும், சிறிலங்கா படையினரே அலட்சியப்படுத்தப் படுகின்றனர். இன்று வெளிவந்த இரு செய்திகள் கீழே...

”மகிந்த அரசை விமர்சித்த எம்.ரி.வி., சக்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது தாக்குதல்



சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பன்னிப்பிட்ட்டியவில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனமான எம்.ரி.வி.யின் கலையகம் அடையாளம் தெரியாத குண்டர்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலைத் தொடர்ந்து குறிப்பிட்ட நிறுவனத்தின் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 2:30 நிமிடமளவில் குறிப்பிட்ட நிறுவனத்தின் கட்டடத்தை சுற்றிவளைத்துக்கொண்ட குண்டர் குழு ஒன்றே இத்தாக்குதலை நடத்தியிருப்பதாகத் தெரிகின்றது.

எம்.ரி.வி. நிறுவனம் மூன்று மொழிகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருவதுடன், பண்பலை அலைவரிசை வானொலிச் சேவைகளையும் மூன்று மொழிகளிலும் நடத்தி வருகின்றது.

அந்நாட்டு அரசாங்கத்தின் மீது அதிகளவுக்கு விமர்சனங்களை முன்வைப்பதால் இந்நிறுவனத்தின் மீது ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அண்மைக்காலத்தில் சீற்றமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.”

பேருந்துகளில் கொண்டு செல்லப்படும் காயமடைந்த படையினர்

வன்னி களமுனைகளில் பெருமளவிலான சிறிலங்கா படையினர் காயமடைந்து வருவதை தொடர்ந்து அவர்களை இருக்கைகள் அகற்றப்பட்ட பேருந்துகளின் மூலம் படைத்தரப்பு மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் கூறப்படுவதாவது:

வன்னி களமுனைகளில் காயமடையும் பெருமளவிலான படையினர் இருக்கைகள் அகற்றப்பட்ட பேருந்துகளில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

படையினரின் தேவைகளுக்கு போதுமான நோயளர் காவு வாகனங்கள் இருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ள போதும் படையினர் பேருந்துகளில் கொண்டு செல்லப்படுவதை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி படங்களுடன் ஆதாரப்படுத்தியுள்ளது.

அக்கட்சியினால் வெளியிடப்பட்ட படங்களில் பெருமளவான படையினர் பேருந்துகளில் பயணிப்பதும், அவர்களில் பலர் அவயவங்களை இழந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

நன்றி: புதினம்.காம்


இந்த அரசுதான் மக்களுக்காக புலிகளுடன் போரிடுகிறோம் என்று சொல்கிறது.



ஐந்திலேயே வளைத்துவிடு..!!!

கிளிநொச்சி மீட்பு: சிங்கள மாணவர்களுக்கு விளக்கம்

தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து கிளிநொச்சி மீட்கப்பட்டமை தொடர்பாக பாடசாலைகளில் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்குமாறு மகிந்த அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சு சகல சிங்கள பாடசாலைகளுக்கும் சுற்று நிருபம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படைத்தரப்பினது வெற்றி மற்றும் சிங்கள தேசியம் என்பவை குறித்து விளக்கமளிக்குமாறு அந்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி: புதினம்.காம்

பேரினவாத சிங்கள அரசு இப்போதே நஞ்சு தூவ முற்படுகிறதோ?




பி.ஜே.பி.யின் புலிப்பாசம்

பி.ஜே.பி.யின் திரு.வைத்தியலிங்கம் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறார்.

இது இவர்களின் நிஜமான நிலைப்பாடா அல்லது காங்கிரஸ் புலிகளை எதிர்ப்பதால் எடுக்கப்பட்ட திடீர் முடிவா என்பது கேள்விக்குரியது.

"Vaithiyalingam, a senior BJP leader and member of the party's national general council, proposed this idea. In an exclusive interview to a Tamil biweekly, he said that although his party did not believe in violent measures, it was unfair to impose the ideas of a Gandhian struggle on the people of Tamil Eelam.

"The British did not disregard any pact they signed with us, the Indians, during the course of our freedom struggle. But, the Sinhalese government has torn apart and rubbished three major peace pacts relating to the Eelam Tamils. In such a situation, how can anyone believe that holding talks with such a government will lead to a solution?" he asked, drawing parallels from history.


http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27918

நான் கடவுள் - அகோரிகளின் கதை??




தமிழ் சினிமாவின் மறுக்கமுடியாத அடையாளமான பாலாவின் நான்காவது படமான ‘நான் கடவுள்’ இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பு: மனோதிடம் உள்ளவர்கள் மட்டும் இப்பதிவை மேற்கொண்டு படிக்கவும்.

‘நான் கடவுள்’ தொடர்பாக சில வலைப்பூக்களை மேய்ந்துகொண்டிருந்தபோது கிடைத்த தகவல்களால் சிறிது அதிர்ச்சி அடைந்து ‘யூ டியூப்’-இல் அகோரிகளைப் பற்றிய ஒளி-ஒலி காட்சியைப் பார்க்க நேர்ந்தது. படுபயங்கரம்.

அகோரிக்கள்(Aghories) :

சிவபெருமானின் மூன்றாவது முகமான 'ருத்ர’ முகத்தை சற்று பயமுறுத்தும் முறையில் வழிபடுபவர்களே அகோரிக்கள் என்று கூறப்படுகிறது. கங்கைக்கரையில் சிறு சிறு குழுக்களாக இருக்கும் இவர்கள், கங்கையில் ‘புனிதம்’ பெறுவதற்காக வீசப்படும் பிணங்களை இழுத்து வைத்து நடுநிசியில் மண்டை ஓட்டு பூஜை நடத்தி அந்த பிணத்தையே அறுத்து சாப்பிடுகின்றனர். இது, சுடுகாட்டு கடவுளான சிவபெருமானை படிப்படியாக அடையும் விதம் என்று கூறுகின்றனர். (கங்கை புனித நீர் என்று இன்னும் நம்புகின்றீர்களா?)




‘நான் கடவுள்’ திரைப்படத்தில் ’ருத்ரன்’ என்ற பெயரில் வரும் ஆர்யா ஒரு அகோரியாக நடித்திருக்கிறார் என்றும், இறுதிக்காட்சியில் தன் காதலியான பூஜாவின் பிணத்தையே அறுத்து சாப்பிடுகிறார் எனவும் தகவல். ’அகோரிக்கள்’ பற்றிய ஒளி-ஒலி காட்சியைப் பார்த்தபின், ‘நான் கடவுள்’ திரைப்பட முன்னோட்டக் காட்சியைப் பார்த்தால்(மேலே) பல ஒற்றுமைகள் தென்படுகின்றன. என்ன, படம் பார்க்க தயாரா?

பின்குறிப்பு: ‘நான் கடவுள்’ ருத்ரனுக்கும் இந்த வலைப்பூவின் பெயருக்கும் எந்த தொடர்புமில்லை. என் பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த பெயரை எனக்கு தேர்வு செய்துவிட்டனர். :)

எது முன்னேற்றம்?

உலகிலேயே ஆங்கிலத்துக்கு அடுத்து தமிழில்தான் அதிகமான இணையத்தளங்களும், வலைப்பூக்களும் உள்ளன என்று ஒரு தகவல் உண்டு.

ஆனால், இந்த வலைப்பூக்களையும் ஆர்குட் போன்ற சமூக தளங்களையும் உள்ளே போய் பார்த்தால் தலையில் அடித்துக்கொள்ள தோன்றுகிறது. கிராமங்களில் நடக்கும் சாதிசண்டைகளுக்கு சற்றும் குறைவில்லாத, அருவருக்கத்தக்க சாதிசண்டைகள் நடந்துவருகிறது.

வெளியில் ஆயுதங்களைக் கொண்டு மோதிக்கொள்கிறார்கள். இங்கே, தாங்கள் தேடிப்பிடித்து படித்த நூல்களைக் கொண்டும், மானாவாரியாக ‘லிங்க்’குகளைக் கொடுத்தும் அடித்துக்கொள்கிறார்கள். மனதில் இருக்கும் துவேஷம் ஒன்றுதான்.

‘பார்ப்பனீய எதிர்ப்பு’, ‘பெரியாரின் மறுபக்கம்’ போன்ற விஷயங்கள் ரஜினி படங்களுக்கு ஒப்பானவை. ஆளாளுக்கு தங்கள் அறிவைக் காண்பிக்கிறோம் என்று கோதாவில் இறங்கி அடித்துக்கொண்டு தங்களையே சிறுமைப்படுத்திக்கொள்கிறார்கள்.

அடப்பாவிகளா, கடைசியில் தங்கள் கணிணி/மென்பொருள் அறிவு இதற்கா உபயோகப்படவேண்டும்? இதற்கு படிக்காத அன்றாடங்காய்ச்சி எவ்வளவோ பரவாயில்லையே...

Monday, January 5, 2009

நான் ஏன் ரஜினி ரசிகன் ஆனேன்?

சில ஒளி-ஒலி காட்சிகளை அளிக்கிறேன். ரஜினி ரசிகர்கள் கண்டு களிக்கவும். மற்றவர்கள் மனமிருந்தால் பார்க்கவும்.

90களில் ஏ.வி.எம் பள்ளியில் பங்கேற்ற ரஜினியின் பேச்சுப்பதிவு.

முதல் பாகம்:




இரண்டாம் பாகம்:





நவம்பர் 3 அன்று நடைபெற்ற ரஜினி-ரசிகர் சந்திப்பு காட்சிப்பதிவுகள்:
(ஐங்கரன் நிறுவனத்தின் பேரில் ‘எந்திரன்’ படத்தின் வியாபாரத்துக்காக இச்சந்திப்பு நடைபெற்றது என்று கூறியவர்கள் முகத்தில் கரி. ஐங்கரன் படத்தையே ‘சன்’னிடம் கொடுத்துவிட்டது. விமர்சனவாதிகள் எல்லாப் பகுதிகளையும் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.)

பகுதி 1:



பகுதி 2:




பகுதி 3:




பகுதி 4:



பகுதி 5:



”ஆச்சி 50” விழாவில் மனம் திறக்கும் ரஜினி:




அறிவுஜீவிகளுக்கு நெத்தியடி:

ஆமாம், நான் ரஜினி ரசிகன் தான்...!!!



இந்தப் பதிவு நண்பர்களுடன் நடந்த ஒரு விவாதத்தின் பாதிப்பு...

அது என்னய்யா..? ரஜினி ரசிகன்னா உங்களுக்கு ஒரு இளக்காரம்... ரஜினி ரசிகன்னு சொன்னவுடனே எங்க அறிவு, சிந்தனை, பேச்சு எல்லாத்திலேயும் ஒரு சந்தேகம்... எங்ககிட்ட கேள்வி கேட்டு, ரஜினியை விமர்சனம் பண்றதிலே ஒரு சந்தோஷம்...

ஏன், ரஜினி எந்த விதத்தில் உங்களுக்கு ஒரு சகிக்கமுடியாததா இருக்கார்? ரஜினி என்ன இந்த மாநில முதல்வரா? அவர் எடுத்த முடிவுகளினால தனிமனிதனா நீங்க பாதிக்கப்பட்டீங்களா? உங்களை யாராவது மிரட்டி ரஜினி படம் பாக்க சொன்னாங்களா? உங்க பணத்தைப் பிடுங்கி ரஜினி சொத்து சேத்தாரா? அது என்ன... ரஜினி ரசிகன் காசு வீணாக்குறான்னு உங்களுக்கு இப்படி ஒரு அக்கறை? எனக்கு புரியவே இல்லை...

ரஜினி இல்லேன்னா கமல், விஜயகாந்த், ஏன் நம்ம விஜய.டி.ராஜேந்தர்னு ஏகப்பட்ட ‘ஆப்ஷன்’ இருக்கும்போது ரஜினியோட சரிவுகளையும், நெருக்கடிகளையும் பாக்குறதுல ஒரு ஆனந்தம்... ஏன் இப்படி?

‘நான் மனநிலை சரியில்லாமல் இருந்தேன். என்னைப் பைத்தியம் என்று கேலி செய்தார்கள்’ என்று எந்த ஒரு சாதாரண மனிதனாவது ஒத்துக்கொள்வானா?

‘ஆம், சில வேளைகளில் என் முடிவுகள் தப்பாக இருந்தன. என்னைக் குழப்பவாதி என்று எழுதுவதில் தவறில்லையே’ என்று எந்த பெரிய மனிதனாவது மேடையில் பேசுவானா?


‘அரசியல் கற்றுக்கொள்ளாமல் அதில் இறங்கமாட்டேன்’ என்று பணிவாக எவனாவது இந்தக் காலத்தில் அறிவிப்பானா?

‘முதலில் உங்கள் தாய்,தந்தை, குடும்பத்தை கவனியுங்கள். பின்னர், திரையரங்கிற்கு வாருங்கள்’ என்று எந்த பெரிய நடிகனாவது அறிவுறுத்துவானா?

‘என்னால் படப்பிடிப்பு ரத்தாகக் கூடாது’ என்று இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்ய இன்று நடிக்கும் வண்டு, சிண்டுகள் கூட யோசிக்குமா?



நல்ல கதைகளில் நடிக்கமுடியவில்லையே என சொல்லும் ரஜினி மசாலா படங்களைத் தொடர்வது ஏன் எனக் கேட்கிறீர்கள். நாங்கள் கேட்கிறோம், ஒரு படத்தில் நடித்தால் கோடி கோடியாக சம்பாதிக்கும் ரஜினி குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒரு படம் நடிக்கலாமே... ஏன் இவ்வளவு இடைவெளி வேண்டும்? ஏன் இமயமலை போய் சுற்றவேண்டும்? எல்லாவற்றிற்கும் மேல் நீங்கள் உங்கள் கொள்கைகளுக்காக எல்லாவற்றையும் இழந்து வாழ்கிறீர்களா அல்லது பிழைப்புக்காக விட்டுக்கொடுத்து வாழ்கிறீர்களா... மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்.

இதற்கெல்லாம் முதலில் பதில் சொல்லுங்கள்.

வார இதழ்களில் வரும் அறிவுஜீவிகளின் கட்டுரைகளையும், பகிரங்கக் கடிதங்களையும் நம்பி பேசாதீர்கள் நண்பர்களே... அவர்கள் எந்நேரமும் நிறம் மாற்றிக்கொள்வார்கள்.(உதா: விகடனின் இந்த வார ‘எந்திரன்’ கவர்ஸ்டோரி)

ரஜினி ரசிகன் மீது அக்கறையிருந்தால் ரஜினி படம் ஓடும் திரையரங்குகள் சென்று அவனை நிறுத்திப் பிடித்து அறிவுரை வழங்குங்கள். குறைந்தபட்சம் ரஜினியின் அடுத்த படத்திற்கு உங்கள் குடும்பத்தில் இருந்தாவது(உங்களையும் சேர்த்து) யாரையும் அனுப்பாமல் இருங்கள்.

குறிப்பு: இது என் பக்கத்திற்கான பதிலே தவிர எந்தவொரு விவாத்தில் பங்கேற்கவும் எண்ணம் இல்லை. எனவே, பின்னூட்டத்தில் என் பதிலை எதிர்பாராதீர்.

தமிழினத் தலைவரும் தமிழனின் தலையெழுத்தும்



தமிழன் என்று சொல்லுவதற்கே பல தகுதிகள் தேவைப்படும்போது, தமிழினத் தலைவர் என்று போற்றப்பட அவர் என்னென்ன செய்திருக்கவேண்டும் அல்லது செய்ய முற்படவேண்டும் என்ற சந்தேகம் என் மனதிற்குள் உண்டு. இலங்கைத் தமிழர் போராட்டத்திற்காக குரல் கொடுத்தால் களிதான் என திருவாய் மலர்ந்திருக்கும் முதல்வர் ’தமிழினத்தலைவர்’ என்று அவ்வப்போது தமிழகத்திற்கு அறிவிக்கப்ப்டும்போது நகைப்பாக மட்டுமல்ல, கடுப்பாகவும் உள்ளது.

5 முறை முதல்வர் ஆகி, 10 தலைமுறைக்கு சொத்து சேர்த்தபின்னும் பதவிக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் மானத்தை இழக்கத் துணிந்தவர் நம் முதல்வர்.

தன் மானத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களின் தன்மானத்தையும் தன் இலவசத்திட்டங்கள் மூலம் அசைத்துப்பார்த்தவர்.

மத்திய மந்திரி பதவிகளுக்காக ஆதரவு தர இழுத்தடித்தவர், ஈழத்தமிழர்கள் விஷயத்தில் மட்டும், வருடக்கணக்காக ‘பதவியைத் துறக்க தயார்’, ‘உயிரைக் கொடுக்கத் தயார்’ என்று முழங்கும் வாய்ச்சொல் வீரர்.

அய்யா, தமிழுக்கு உம்மை விட்டால் ஆளில்லை என்று சொன்னவன் நான். ஆனால், உங்கள் கேவலமான சுயநல அரசியலால்தான் இன்று கிளிநொச்சி கைவிட்டுப் போனது என்று உங்கள் ஒருத்தரை மட்டும் குற்றம் சாட்ட இன உணர்வு கொண்ட எந்தத் தமிழனுக்கும் எந்த தயக்கமும் இல்லை.

எல்லாரிடமும், எல்லா விதத்திலும், எல்லா வசவுகளையும் வாங்கிக்கொண்டும் நெஞ்சு நிமிர்த்தி உட்கார்ந்திருக்கும் தங்களிடம் என்னத்தை எதிர்பார்ப்பது?

ஹும்... பெருமூச்சு விடத்தான் முடிகிறது.