
நம் எல்லோரையும் அசத்திய விஜய் தொலைக்காட்சியின் ‘தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு’ தற்போது ‘சுட்டிகள்’ பக்கம் திரும்பியுள்ளது. அடடா, சில மழலைகளின் தமிழ் உண்மையாகவே நம்மை அதிசயிக்க வைக்கிறது. தமிழ், தமிழகத்தில் இன்னும் சில காலத்திற்கு தாக்குப்பிடிக்கும் என்ற நம்பிக்கை கொடுத்த விஜய் டி.வி.க்கு நன்றி.
என்றாலும், சில வளர்ந்த சுட்டிகளைப் பார்க்கும்போதுதான் ‘இது என்ன கலாட்டா’ என்று நினைக்கவைக்கிறது. போகட்டும், ஆரம்ப சுற்றுகள் முடியமுடிய நமக்கு இன்னும் தெளிவாகலாம்.

ஆனால், நான் இப்போது சொல்ல விரும்புவது சிலரின் ஆரவாரமான ‘உடல்மொழி’யைப் பற்றித்தான். பெற்றோர் சொல்லிகொடுத்ததோ, அல்லது சென்றமுறை வெற்றிபெற்ற திரு.விஜயனை பின்பற்றுகிறார்களோ தெரியவில்லை. பேச்சைத் தொடங்கியவுடன் கையை, காலை எல்லா பக்கமும் ஆட்டி ஆட்டி பேசுவதும், உச்சஸ்தாயியில்(high pitch) இருந்து இறங்கிவர மறுப்பதும் பல சமயம் ‘தமிழ்ப்பேச்சை’ ம்யூட்டில் பார்க்கவைக்கிறது. எனக்கென்னவோ, பெற்றோர்கள் கைவண்ணமாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
பொங்கும் அருவிபோல் உரையாற்ற சொல்லிக்கொடுக்கும் பெற்றோர் தேவையான அளவுக்கே ‘உடல்மொழி’யைப் பயன்படுத்தவும் சொல்லிக்கொடுக்க வேண்டும். இல்லையெனில், என்ன பிரமாதமான உரையாக இருந்தாலும் காண்போரை சங்கடப்படுத்தும்.
‘உடல்மொழி’யை மிகைப்படுத்துபவர்களை நடுவர்கள் நிராகரித்துவிடுகிறார்கள். அது ஒன்றுதான் தற்போது நமக்கு ஆறுதல். அப்படி நிராகரிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் உண்மையை உணராமல், ‘நீ சரியா பேசலை’ என்று அவர்கள் மேல் பாயாமல் இருந்தால் நல்லது.
குறிப்பு: இந்த ‘சுட்டிகள்’ நிகழ்ச்சி பற்றி வலையில் மேய்ந்தால் இந்த தலைப்பில் எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. நண்பர்கள் யாராவது கண்டிருக்கிறீர்களா?
2 comments:
tamil.webdunia.com/entertainment/tvtime/news/0903/30/1090330037_1.htm
Did you watch the latest programme on Vijay, where TV stars were asked to read a few Tamil sentences quickly?
It's pathetic that many of our folks don't respect the mother tongue! so sad!
oh btw, why don't you write many articles these days?
Post a Comment