Wednesday, April 29, 2009

இறுதி யுத்தம்






This video is meant to persuade the Tamils in Tamil Nadu not to support the Indian Congress party in this coming election because the Congress Party fully supported the genocidal war against Tamils in Sri Lanka. This video was passed to us by Tamil well wishers. We are just passing it to you.

For full video: http://www.tubetamil.com/view_video.php?viewkey=7607ce912ab7fe7106f3


To download: http://www.tamilsforobama.com/video/Final_war.flv

முதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு ஒரு கடிதம்



“ஐயா முதல்வர் ஐயா, எங்கள் ஊரிலே பிணங்கள் சோறு தின்பதில்லை... கருகிப் போன குழந்தைகள் பால்மா கேட்பதுமில்லை!” இவ்வாறு தனது கடிதத்தில் குறிப்பிட்டு தற்போது கனடாவில் வாழ்ந்து வருகின்ற ஒரு ஈழத் தமிழ்மகள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றை வரைந்திருக்கின்றார்.

அக்கடிதத்தின் முழுவடிவம்:-

வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் கூட நாற்காலி கூடவே இருக்க ஏங்கும் குறளோவியம் தந்த தானைத் தலைவா, இராஜதந்திரம் என்னும் பாழாய்ப்போன இடியப்பத்துக்குள் சிக்கி சிறுத்துப் போகும் சிங்கமே,

தனக்குத் தானே தந்தி அடிக்கும் அறிவுடை முதல்வா,

வார்த்தை ஜாலங்களால் மட்டுமே படை நடாத்தி உலகெல்லாம் வென்ற உலகத் தமிழினத்தின் தலைவா,

அந்தப் பட்டத்தை தங்களுக்குத் தந்தவரை அச்சிடப்படமுடியாத வார்த்தைகளாலும், தங்களை அச்சிடப்படக்கூடிய வார்த்தைகளாலும் வணங்குகின்றேன்.

"ஐயோ இரத்தம் பாயுதக்கா. நோவு தாங்க முடியேல்லை அக்கா" என்று வன்னியில் இருந்து கதறும் ஒரு பிஞ்சுக் குழந்தையொன்றின் கதறலை கேட்டு மனமுடைந்துபோய் எழுதும் மடல் இது. நான் ஈழத்திலிருந்து அகதியாகி அந்நிய தேசமொன்றில் வசிக்கும் பாவப்பட்ட தமிழிச்சி. தங்களை அவமானப்படுத்துவது எனது நோக்கமில்லை... புண்ணைச் சொறிவதில் எனக்கு இன்பமேதுமில்லை.

நான் கனடாவிற்கு எட்டு வயதில் ஏதிலியாய் வந்தேன். இப்போது எனக்கு வயது இருபத்து நாலு. கனடா வந்தாலும் தாய் நாட்டையும் தமிழையும் மறக்கவில்லை... மறக்கவும் மாட்டேன். தங்களோடு ஒப்பிடும்போது நான் ஒரு சிறுமி. அஃதிருக்க, மேன்மக்கள் மேன் மக்களே என்ற தமிழ் வார்த்தைகள் உங்களுக்கு மட்டும் பொருந்தாமல் போனதேன்.

நீங்கள் தமிழுணர்வு மிக்கதொரு சிறந்த கதை ஆசிரியர் என்றுதான் இதுவரை தெரிந்து வைத்தோம். ஆனால் தாங்கள் உலகமகா நடிகன் என்று ஈழப் பிரச்சினை தொடர்பான உங்கள் தந்திகளாலும், கேள்வி பதில் அறிக்கைகளாலும் இப்போது அறிந்து கொண்டோம்.

உங்களிடம் இலைமறை காயாய் மறைந்திருந்த நடிப்புத் திறமையை வெளியே கொணர்ந்து வந்த அன்னை சோனியாவுக்கு தமிழ்த்திரையுலகின் சார்பில் கோடி நன்றி. இதற்கு விலையாக ஈழத்திலே கருவிலேயே குண்டுபட்டுச் செத்துப் போன சிசுக்களை யாது செய்ய?

பதவி ஆசைக்காகவும், அரசியல் குப்பைக் காரணங்களிற்காகவும் எங்கள் ஈழத்தமிழ் மக்களை பலியாக்காதீர்கள். அவர்கள் இரத்தம் சிந்துவதைப் பார்த்தும் உங்களுக்கு இரக்கம் வரவில்லை என்றால் நிச்சயமாக நீங்கள் ஒரு மனிதனாகவே இருக்க முடியாது. பதவியை இராஜினாமா செய்யப் போகிறீர்கள் என்று ஆரம்பி்த்து உண்ணாவிரதம் வரை உங்கள் மெகா தொடர் நாடகம் கலைஞர் ரீவியில் வரும் நாடகங்களைப் போலவே இன்னும் தொடர்கின்றது.

இன்னும் ஈழத்தமிழர் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். ஆனால் அதனை நீங்களே உங்கள் கபட நாடகங்களால் கெடுத்து விடுவீர்கள் போல் உள்ளது. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் ஐயா. ஈழத்தமிழரும் தமிழ்நாட்டுத் தமிழரும் வேறு வேறல்ல. அனைவரும் தமிழர்தான். தமிழன் என்றால் மானம் மரியாதைக்குத் தான் பெயர் போனவன். நீங்களோ மரியாதைக்குத்தானும் ஒரு மானமுள்ள இனப்பற்றுள்ள தமிழனாய் இருக்க விரும்புகிறீர்கள் இல்லை.

உங்களை மாதிரி பதவி ஆசைக்காக சோனியா அம்மையார் மற்றும் மகிந்த போன்றவர்களின் காலைப் பிடித்துக்கொண்டிருக்கம் சுயநலவாதிகளால்தான் எமக்கு இன்னமும் ஈழம் கிடைக்கவில்லை...விடிவும் கிடைக்கவில்லை.

இந்த வயதில் உங்களுக்கு பதவிப் பித்துத் தேவைதானா? பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். தங்களுக்கு அதுவும் பொய்த்துப் போயிற்றே. பாதி நாட்கள் முதுகு வலி என்று வைத்தியசாலையில் படுத்துறங்கி அறிக்கைப் போர் புரிந்து அரசியல் என்னும் சாக்கடையில் புரண்டு தன்மானத்தை இழந்து பதவி சுகம் காண விரும்பும் வாழ்வெல்லாம் வெல்லமா? நீங்களே சிந்தியுங்கள். நாங்கள் ஏன் பிறந்தோம் என்று யோசியுங்கள். நாங்கள் மற்றவர்களுக்கு என்ன நல்லது செய்தோம் என்று சிந்தியுங்கள். நாளைக்கு நாங்கள் இறக்கும் போது எங்களுக்காக யாரேனும் அழுவார்களா என்று யோசியுங்கள்.

ஈழ இனத்தை அழிக்க திட்டம் போட்டுக் கொடுத்த பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனையே போர் நிறுத்தம் பற்றி பேச தூதனுப்பியதன் நியமான காரணம் ராஜதந்திரி உங்களுக்குத் தெரியாமல் போனது அதிசயம்தான். கூப்பிடு தூரத்திலே கோடி கோடியாய் இரத்ததின் இரத்தங்கள் நீங்கள் இருக்க, வன்னியிலே எம்மினம் இரத்தம் சிந்துவதும் அதிசயம்தான். உங்கள் கட்சியின் பெயரிலேயே திராவிடர் என்ற பதத்தை வைத்துக் கொண்டு ஆரியரோடு கூட்டுச் சேர்ந்து சிங்கள கொடுங்கோல் அரசுக்கு தாங்கள் உதவுவதும் அதிசயம்தான்.

"ஒரே இரத்தம்" என்ற நாடகம் யாத்த நீங்கள் எண்பத்தைந்து வயசினிலும் இனத்தை விட பதவிதான் முக்கியம் என்று சுயநலவாதியாய் இருப்பதும் அதிசயம்தான்.

உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி இந்திய மத்திய அரசு தூதுவரை கொழும்பிற்கு அனுப்பிய மறு நாளில் எல்லாம் குண்டுவீச்சின் வீரியம் கூடுகிறதாம். உங்களுக்குப் போற வழியில் புண்ணியமாய்ப் போகும் தயவு செய்து இனியும் தூதுவர்களை அனுப்பி எரியிற நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம். மத்திய அரசுக்கு தந்தி அனுப்பிவிட்டோம்...இதற்கு மேல் யாது செய்ய என்ற சாட்டுக்களை விட்டுவிடுங்கள் ஐயா. "இன்னும் ஓரு மணித்தியாலத்திற்குள் வன்னியிலே போர் நிறுத்தம் நடைமுறைக்கு வராவிடின் தமிழகம் இந்தியாவிலிருந்து பிரிந்து போகும்" என்று ஒரு அறிக்கை விட்டீர்கள் என்றால் ஒரு நிமிடத்திலேயே போர் நிறுத்தம் வந்துவிடும். வேண்டாம், இந்திய இறையாண்மைக்கு எதிராக நீங்கள் எதுவுமே பேச வேண்டாம். 'இனி காங்கிரஸ்தான் தமிழகத்தின் எதிரி' என்று ஓர் அறிக்கைவிட வேண்டியிருக்கும் என்று மத்திய அரசுக்குச் சொல்லுங்கள்...சொன்னபடி நடவுங்கள்...நாளையே வன்னியிலே போர் நிறுத்தம். உங்கள் பலம் உங்களுக்குத் தெரியவில்லை. முடிந்தால் ஈழ மக்களிற்கு உதவுங்கள். இல்லையேல் ஈழம் பற்றிக் கவிதை வரைவதை, அறிக்கை விடுவதை தயவு செய்து நிறுத்துங்கள்.

ஐயா கலைஞர் ஐயா, ஈழத்து மக்களுக்கு சோறும், பால்மாவும் அனுப்ப வேண்டாம். முதலில் அவர்களது உயிரைக் காப்போம். ஐயா முதல்வர் ஐயா, எங்கள் ஊரிலே பிணங்கள் சோறு தின்பதில்லை...கருகிப் போன குழந்தைகள் பால்மா கேட்பதுமில்லை.

தயவுசெய்து நீங்கள் எங்கள் தலைவர் பிரபாகரனின் நண்பன் என்று சொல்லி எங்கள் தலைவனைக் கேவலப்படுத்தாதீர்கள். தங்களை மாதிரி ஒரு சுயநல விரும்பி நிச்சயமாக எங்கள் தலைவனின் நண்பனாக இருக்கவே முடியாது. உங்களை கெட்ட வார்த்தை சொல்லி திட்ட வேண்டும் என்றுதான் தோன்றுகின்றது. ஆனால் நான் ஒரு ஈழத் தமிழிச்சி என்பதாலும், பெரியவர்களைக் கனம் செய்ய வேண்டும் என்ற தமிழர் பண்புக்காகவும் விட்டு வைக்கின்றேன்.

என்னைப்போன்ற பல தமிழர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காகத் தான் இந்த மடலை எழுதுகின்றேன். இதை நான் உங்களைப் புண்படுத்துவதற்காக எழுதவில்லை..சிந்திக்க வைப்பதற்காகத் தான் எழுதிகின்றேன். மன்னித்துவிடுங்கள் என்று நிச்சயமாகக் கேட்க மாட்டேன். காங்கிரஸிடம் இன்னமும் கூட்டு வைப்பதற்காக நீங்கள்தான் அதனை அனைத்து தமிழர்களிடமும் கேட்க வேண்டும்.

வாழ்க தமிழ்
வெல்க தமிழர்
தமிழர்தான் புலிகள்
புலிகள்தான் தமிழர்
எவர் வந்து தடுத்தாலும்
விரைவில் மலரும் தமிழீழம்

இப்படிக்கு,
ஒரு தமிழிச்சி.

Tuesday, April 28, 2009

தமிழ் மீடியாக்களின் அராஜகம்!!!

நண்பர்களே,

கீழ்க்கண்ட செய்திகள் பல்வேறு வலைப்பூக்களில் இருந்தும், இணயதளங்களில் இருந்தும் தொகுக்கப்பட்டது. இணையதளங்களிலும், வலைப்பூக்களிலும் நேரம் செலவிடாதவர்கள் இந்த செய்தியை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், நாம் பார்க்கும் எந்த தமிழக செய்தித்தாளிலும் இந்த கைது செய்தி வரவில்லை. துரோகி கருணாவின் தொடர்பேட்டியை அளித்த ‘தினமலர்’தான் பெரும்பாலும் நாம் பார்க்கும் முக்கிய இணைய செய்தித்தாள். செய்திகளை அளிக்கும் வேகத்துக்காகத்தான் நாம் இன்னும் அந்த சனியனை சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தினமலரின் அட்டூழியங்கள் சொல்லி மாளாது, இந்த பதிவும் தினமலர் பற்றி மட்டுமே அல்ல. நாம் தினசரி செய்திகளுக்காக அணுகும் ஊடகங்கள் அதிகாரத்திற்கு பயந்தோ என்னவோ இந்த 13பேரின் கைது செய்தியை கொடுக்கவே இல்லை.

தமிழக செய்தி ஊடகங்கள் நடுநிலை தவறி வெகுநாளாகிறது. ஒவ்வொரு ஊடகத்தைப் பார்க்கும்போதும் அதன் சார்புநிலை என்ன என்பதை எண்ணிப்பார்த்து பின் செய்திகளை வடிகட்டி படிக்கவேண்டியுள்ளது. ராஜீவ்காந்தி மரணத்துக்கு மொத்த தமிழ்நாடும் காரணம் என்று சித்தரிக்க முயன்ற வடநாட்டு ஊடகங்களைப் பற்றி சொல்லவேண்டுமா, என்ன..? கீழே உள்ள செய்தியைப் படியுங்கள், தலையில் அடித்துக்கொள்ளுங்கள். நாம் வேறு என்னதான் செய்யமுடியும்?



13 மென்பொருள் புரோகிராமர்கள் கைது


திமுக, காங்கிரஸ் கட்சியினருக்கு தேர்தல் பயம் ஏற்பட்டுவிட்டது. மத்திய அமைச்சர் சிதம்பரத்தை எதிர்த்து மாணவர் ராஜீவ்காந்தி போட்டியிடுகிறார். இவருடன் பிரசாரத்தில் ஈடுபட்ட 13 மாணவர்களை காங்கிரஸ், திமுகவினர் தாக்கியுள்ளனர்.

சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அம்மாணவர்களை அழைத்து மிரட்டியுள்ளார்.


இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த செய்தி:

On Saturday, some Congress supporters pelted stones at 13 of them as they distributed pamphlets in Alangudi market. Police rushed to the spot and took them to the Alangudi station under the pretext of protecting them, said Rajiv, but moved them to Ganga Nagar police station in Pudukkottai around 7.30 pm, booked them under sections 188,147,153, 504 and 505 of IPC at midnight and remanded them in judicial custody on Sunday morning.


சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வந்த தகவல் தொழில் நுட்பதுறையை சேர்ந்த வல்லுனர்கள் 13 கைது

மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வந்த தகவல் தொழில் நுட்ப துறையை சேர்ந்த வல்லுனர்கள் 13 பேர் நேற்று இரவு ஆலங்குடியில் 188, 147, 153(a), 504, 505 போன்ற செக்ஷன்களின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்

இலங்கை சம்பந்தமாக துண்டு பிரசுரம் கொடுக்கக் கூடாது என்று ஏதோ சட்டம் இருப்பதாகவும் அதை மீறியதற்காக கைது செய்கிறோம் என்று போலிஸ் சொல்லி இருக்கிறது.

கைது செய்யப்படுவதை படம் பிடித்த தினத்தந்தி நிருபர் காவல் துறையினரால் தாக்கப்பட்டுள்ளார். அவருடைய புகைப்படக் கருவியும் பிடுங்கப் பட்டுள்ளது


பாதுகாப்புத் தருவதாக அழைத்துச் சென்று...

ஆலங்குடி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ராஜீவ் காந்தி மற்றும் நண்பர்களை திமுக குண்டர்கள் தாக்கியுள்ளனர். அவர்களே காவல் நிலையத்திற்கும் தகவல் தந்துள்ளனர். அங்கு வந்த காவல் துறையினரோ இங்கு தொடர்ந்து பிரச்சாரம் செய்தால் பிரச்சினை எழ வாய்ப்பிருப்பதால் அங்கிருந்து வெளியேறும்படி வற்புறுத்தியுள்ளனர். நமது நண்பர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே பாதுகாப்புக்காக எனக் கூறி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இவ்விடயம் உடனடியாக தமிழீழ ஆதரவுத் தலைவர்களுக்குத் தெரியப்படுத்தவே ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன் (CPI) காவல் நிலையத்திற்குச் சென்று நண்பர்களனைவரையும் சந்தித்திருக்கிறார். பின்னர் இருநூறுக்கும் மேற்பட்ட தமிழுணர்வாளர்கள் ஆலங்குடி பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்தடுத்து பிரச்சினை பெரிதாகவே இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ததாக கூறி (இரவு 12 மணிக்கு) புதுக்கோட்டை கணேசபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இரவு முழுவதும் கணேசபுரம் காவல் நிலையத்தில் வைத்திருந்துவிட்டு பின்னர் ஞாயிறு காலையில் திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அங்கு இவர்களுக்கு காவல் நீட்டிப்புச் செய்யப்பட்டு புதுக்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரின் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

188 - இரு இனங்களுக்கு எதிரான மோதல்
143 - சட்ட விரோதமாகக் கூடுதல்
504 - தனிநபர் மீது அவதூறு பரப்புதல்
506/2 - அவதூறு பரப்பும் வகையில் துண்டறிக்கை வெளியிடுதல்

இரு இனங்களுக்கு எதிரான மோதல் - எந்த இரு இனங்களுக்கு எதிராக...???

சட்ட விரோதமாகக் கூடுதல் - தேர்தல் பிரச்சாரம் செய்வது சட்ட விரோதமா?

தனிநபர் மீது ’அவதூறு’ பரப்புதல் - தேர்தல் பிரச்சாரம் செய்யும் அத்தனை அரசியல்வாதிகளையும் கைது செய்யவேண்டுமே...

அவதூறு பரப்பும் வகையில் துண்டறிக்கை வெளியிடுதல் - போங்கடாங்...


தமிழ்ப்பேச்சும், சுட்டிகளின் வீச்சும்...



நம் எல்லோரையும் அசத்திய விஜய் தொலைக்காட்சியின் ‘தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு’ தற்போது ‘சுட்டிகள்’ பக்கம் திரும்பியுள்ளது. அடடா, சில மழலைகளின் தமிழ் உண்மையாகவே நம்மை அதிசயிக்க வைக்கிறது. தமிழ், தமிழகத்தில் இன்னும் சில காலத்திற்கு தாக்குப்பிடிக்கும் என்ற நம்பிக்கை கொடுத்த விஜய் டி.வி.க்கு நன்றி.

என்றாலும், சில வளர்ந்த சுட்டிகளைப் பார்க்கும்போதுதான் ‘இது என்ன கலாட்டா’ என்று நினைக்கவைக்கிறது. போகட்டும், ஆரம்ப சுற்றுகள் முடியமுடிய நமக்கு இன்னும் தெளிவாகலாம்.


ஆனால், நான் இப்போது சொல்ல விரும்புவது சிலரின் ஆரவாரமான ‘உடல்மொழி’யைப் பற்றித்தான். பெற்றோர் சொல்லிகொடுத்ததோ, அல்லது சென்றமுறை வெற்றிபெற்ற திரு.விஜயனை பின்பற்றுகிறார்களோ தெரியவில்லை. பேச்சைத் தொடங்கியவுடன் கையை, காலை எல்லா பக்கமும் ஆட்டி ஆட்டி பேசுவதும், உச்சஸ்தாயியில்(high pitch) இருந்து இறங்கிவர மறுப்பதும் பல சமயம் ‘தமிழ்ப்பேச்சை’ ம்யூட்டில் பார்க்கவைக்கிறது. எனக்கென்னவோ, பெற்றோர்கள் கைவண்ணமாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

பொங்கும் அருவிபோல் உரையாற்ற சொல்லிக்கொடுக்கும் பெற்றோர் தேவையான அளவுக்கே ‘உடல்மொழி’யைப் பயன்படுத்தவும் சொல்லிக்கொடுக்க வேண்டும். இல்லையெனில், என்ன பிரமாதமான உரையாக இருந்தாலும் காண்போரை சங்கடப்படுத்தும்.

‘உடல்மொழி’யை மிகைப்படுத்துபவர்களை நடுவர்கள் நிராகரித்துவிடுகிறார்கள். அது ஒன்றுதான் தற்போது நமக்கு ஆறுதல். அப்படி நிராகரிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் உண்மையை உணராமல், ‘நீ சரியா பேசலை’ என்று அவர்கள் மேல் பாயாமல் இருந்தால் நல்லது.

குறிப்பு: இந்த ‘சுட்டிகள்’ நிகழ்ச்சி பற்றி வலையில் மேய்ந்தால் இந்த தலைப்பில் எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. நண்பர்கள் யாராவது கண்டிருக்கிறீர்களா?

கவிஞர் தாமரையின் அனல் பே(வீ)ச்சு...!!!

இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டி, சென்ற வாரம் தமிழ்த்திரையுலகம் சார்பில் நடைபெற்ற தொடர்முழக்கப் போராட்டத்தில் அனல் கக்கிய கவிஞர் தாமரை அவர்களின் பேச்சுக்கள் கொண்ட காணொலிக்காட்சிகள்...

பகுதி 1:



பகுதி 2:



பகுதி 3:




ஒரு பெண் ‘எனக்கு என்ன இடர் வந்தாலும் பரவாயில்லை’ என்று கர்ஜிக்க, சில ஆண்களோ ‘எதற்கோ’ பயந்து அவரை அடக்கி உட்காரவைக்கின்றனர்.

என்னே, அவர்களது வீரம்....!!! வேடதாரிகளை கிழித்து தொங்கப்போட்ட வீரத்தமிழச்சிக்கு வணக்கங்கள்.

Wednesday, February 25, 2009

The Curious case of Benjamin Button





ஆஸ்கார் விருதுப் பட்டியலில் இடம்பெற்ற இந்த சுவாரசியமான திரைப்படத்தைப் பற்றிய பதிவு விரைவில்...

அதுவரை, புகைப்படங்கள்...(புகைப்பட வரிசைப்படிதான் கதாநாயகன் வாழ்க்கை அமைகிறது என்பதுதான் சுவாரசியம்...)

28/04/2009 - மன்னிக்கவும். நீண்ட நாட்களாகிவிட்டதால் இப்படம் பற்றிய எனது பார்வையை இப்போது சொல்வது நன்றாக இருக்காது. வாய்ப்பு இருந்தால் வேறொரு நாள் இப்படம் பற்றிய எனது கருத்துக்களை சொல்கிறேன்.

Tuesday, February 24, 2009

SDM - எந்த வகை?


ஆஸ்கார் கொண்டாட்டங்கள் ஓரளவு முடிவடைந்து மக்கள் மற்ற விஷயங்களில் கவனத்தைத் திருப்பத்தொடங்கிவிட்டார்கள். நிஜம்தான், இன்றைய காலகட்டத்தில் எல்லாவற்றிற்கும் அல்பாயுசுதான்.

ஆஸ்கார் நாயகன் சத்தமில்லாமல் அதே புன்னகையோடு வலம் வருகிறார். ஆஸ்கார் விருதை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியதே நாம்தான் என்று நினைத்துக்கொண்டிருந்த ஒருவர் முகத்தைத் துடைத்துக்கொண்டு வாழ்த்து அனுப்பிவிட்டார்.

இந்நிலையில், ஒரு ஜப்பானிய திரைப்படத்திற்கு ‘சிறந்த வேற்றுமொழிப்படம்’ விருது கிடைத்ததும் நண்பர்கள் சந்தேகத்தைக் கிளப்பிவிட்டனர். ‘ஸ்லம்டாக்’ படத்துக்கு எந்த வகையில் விருது கிடைத்தது? இந்தியாவில் எடுத்த படம்தானே என்று...

’ஸ்லம்டாக் மில்லியனர்’ ஹாலிவுட் இயக்குனரால் இந்தியாவில், இந்தியக்கலைஞர்களின் பங்களிப்புடன் எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம் என்று (தேடிப்பிடித்து)தீர்ப்பு எழுதுவதற்குள்(ஹி...ஹி...) மண்டை காய்ந்துவிட்டது. தப்பாக சொல்லிடக்கூடாது இல்லையா...?

இந்நிலையில், நாம் ஆஸ்கார் விருது பெற்ற கலைஞர்களுக்காக பெருமைப்படலாமே ஒழிய, இந்தப்படத்துக்காக பெருமைப்பட ஒன்றுமில்லை என்பது என் கருத்து. இது மேற்கத்தியர்களுக்காக மேற்கத்தியப் பார்வையில் இந்தியாவைப்பற்றி எடுக்கப்பட்ட படம் என்றும் சொல்லலாம். படம் முழுவதும் நம்மை மட்டம்தட்டியே எடுக்கப்பட்டதை உணரலாம். சொல்வதற்கில்லை, மேற்கத்தியர்கள், இந்தியாவை மட்டம் தட்டவே இதை இந்த அளவு எடுத்துச்சென்றிருக்கலாம். படத்தின் தலைப்பை மொழிபெயர்க்கப்போனால் “குப்பத்து நாய் கோடீஸ்வரனாகிறான்” என்ற சங்கடமான பொருள் கிடைக்கும்.

இதோ, ஜூ.வி.யில் இருந்து ஒரு முக்கியமான பேட்டி(சில பகுதிகள் மட்டும்)...

மும்பை குப்பங்களில் பெரியதாக இருக்கும் தாராவிவாசிகளில் ஒருவரும், சமூக சேவைக்காக 'மகசேசே' விருது பெற்றவருமான ஜோக்கிங் அற்புதம் எனும் தமிழரிடம் பேசினோம்.

''மும்பையில் குப்பங்கள் உருவானது எப்படி?''

''இதற்குக் காரணமே தமிழர்கள்தான். 1938-ல் ஒரு முறை தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய அளவில் வறட்சி ஏற்பட்டது. அப்போது அங்குள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக மாவட்டத்தை விட்டே வெளியேறி, மகாராஷ்டிரா வந்தனர். இதில் பாதிப் பேர் சூரத்திலும் மீதிப் பேர் மும்பை நகரின் வெளிப்புறத்திலும் குடிசைகள் போட்டுத் தங்கினர். அப்போது காடாக இருந்த இங்கு, மலை சாதி மக்களுக்காக தாரா தேவி கோயில் இருந்தது. அதுவே, இந்தப் பகுதியின் பெயரானது. நாளடைவில் இந்தப் பெயர் மருவி, தாராவி என்று ஆனது. மற்ற மாநிலத்தவர்களும் தமிழர்களுடன் சேர்ந்துகொள்ள, ஆசியாவின் மிகப் பெரிய குப்பமாகி விட்டது தாராவி. சுமார் 520 ஏக்கர் பரப்புள்ள இங்கே 93 பகுதிகளைக் கொண்ட 3,600 குப்பங்கள் உள்ளன!''

''தாராவியை வைத்து எடுக்கப்பட்ட 'ஸ்லம் டாக் மில்லியனர்' படம் பற்றி...''

''எங்கள் குப்பங்களைப் பற்றி அந்தப் படத்தில் காட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு விஷயமும் அப்பட்டமான பொய்! குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாதது போல சித்திரிக்கப்பட்டுள்ளதும் அதில் ஒன்று. 2001-ல் நடந்த ஐ.ஏ.எஸ் தேர்வில், அதிக மார்க் வாங்கி பாஸ் செய்தவர், தாராவி குப்பத்துக்காரர்தான். தற்போது மும்பை கூடுதல் முனிசிபல் கமிஷனராக இருக்கும் எஸ்.எஸ்.ஷிண்டே உட்படப் பலர் இந்தக் குப்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். தற்போதுகூட இங்கு 46 எம்.பி.பி.எஸ், 38 இன்ஜினீயரிங் மாணவர்கள் உள்ளனர். மும்பையில் தென் இந்திய உணவு வகை களுக்குப் பிரசித்தி பெற்ற 'முத்துசாமி கேட்டரர்ஸ்' இயக்குநர் முத்துக்கிருஷ்ணன், இந்தக் குப்பத்தைச் சேர்ந்தவர்தான். இவர் போல நியாயமாக, உழைத்துச் சம்பாதித்த ஏராளமான கோடீஸ்வரர்கள் இந்தக் குப்பத்துக்குச் சொந்தக்காரர்கள். ஏற்கெனவே, மீரா நாயர் தன்னுடைய 'சலாம் பாம்பே' படத்தில் மும்பைக் குப்பங்களைத் தவறாகச் சித்திரித்தார். அதையும் தாராவி மக்கள் கடுமையாக எதிர்த்தனர். அது போலவே இந்தப் படத்தையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.''

''படங்களில் காட்டப்படுவது போல் இங்கு உண்மை யிலேயே வறுமை நிலவுகிறதா?''

''நாங்கள் வறுமையாக இருப்பதாகச் சொல்லி உலக அளவில் நன்றாகக் கல்லா கட்டிவிட்டது அந்தப் படக்குழு. இந்தியாவிலேயே விலை குறைவான உணவு தாராவியில்தான் கிடைக்கும். வெறும் 15 ரூபாயில் மூன்று வேளையும் பசியாறிக் கொள்ள முடியும். ஒரு நாளைக்கு சுமார் எட்டு லட்சம் இட்லிகள் இங்கு தயாராகி, மும்பை முழுவதும் சப்ளையாகிறது. ஒரு நாய்கூட இங்கே பட்டினியால் செத்ததில்லை. இதனால்தான், தமிழகம் உட்படப் பல மாநிலங்களில் இருந்து இன்றும் கூடப் பலர் தாராவிக்கு வந்து தங்கி வாழ்க்கை நடத்துகிறார்கள். பசி, பட்டினியில் அடிபடவா இங்கே வருவார்கள்? சொல்லப் போனால், மும்பைவாசியினர் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு இந்தக் குப்பங்களில்தான் கிடைக்கிறது!''

''ஆனால், தாராவியில் இன்னும் குப்பைகள் அதிகமாகக் கொட்டப்படும் சூழல் நிலவுகிறதே?''

''இங்கே 10 வயது முதல் குப்பை பொறுக்கி விற்ற முகம்மது அலி என்ற சிறுவன், இன்று தாராவியின் கோடீஸ்வரர்களில் ஒருவர். இன்றும் சுமார் 300 குடும்பங்கள், அந்தக் குப்பைகளில் கிடைத்தவற்றை விற்று தினம் ரூபாய் 300 முதல் 1,000 வரை சம்பாதிக்கிறார்கள். அதே போல், இங்குள்ள பழைய பொருட்கள் சந்தையில் வாங்கப்படும் பிளாஸ்டிக்குகளை வைத்து, பி.வி.சி. பைப்புகளுக்கான மூலப் பொருட்கள் ஏராளமாகத் தயாராகின்றன. இது தடைப்பட்டால் பொருட்கள் கிடைக்காமல், இந்தியா முழுவதும் தொழில் மற்றும் கட்டுமானப் பணிகள் ஸ்தம்பித்துவிடும். அறுவை சிகிச்சையின்போது தையல் போடப் பயன்படும் ஒரு வகை நூல், இதே தாராவியிலிருந்துதான் 40 நாடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. அதனால் குப்பையைக் கூட தொழிலாக மாற்றிக் காட்டிய அதிசய பூமி இது!''

எப்படியோ, தமிழை ஆஸ்கார் மேடையேற்றிவிட்டோம்.

கொசுறு: இவ்வளவுகாலம் அமைதியாக இருந்த மலையாளிகள் தற்போது, ஏ.ஆர்.ரகுமானை சொந்தம் கொண்டாட முயற்சிக்கிறார்கள். ஏ.ஆர்.ஆரின் தந்தை சேகர் கேரளாவைச் சேர்ந்தவர்.